மீசை கூட முளைக்கவில்லை- டியூஷன் டீச்சரோடு 15 வயதுச் சிறுவன் …. ஆனால் கதை வேறு பாதையில்

மீசை கூட முளைக்கவில்லை- டியூஷன் டீச்சரோடு 15 வயதுச் சிறுவன் …. ஆனால் கதை வேறு பாதையில்

15 வயது மகனை காணவில்லை என்று, சிறுவனின் அம்மா, போலீஸ் ஸ்டேஷனில் புகார் தந்திருந்த நிலையில், இது தொடர்பான நடவடிக்கையை போலீசார் நடத்தி வருகிறார்கள். சென்னை எம்ஜிஆர் நகர் போலீஸ் ஸ்டேஷனில் கடந்த, சில தினங்களுக்கு முன்னர் தனது மகனைக் காணவில்லை என்று ஒரு பெண் புகார் தந்து இருந்தார். இதனை அடுத்து பொலிசார் தனிப்படை அமைத்து தேட ஆரம்பித்த நிலையில்… கதை வேறு பக்கமாகச் செல்ல ஆரம்பித்துள்ளது !

இந்த புகாரின்பேரில் போலீஸாரும், மாயமான சிறுவனை தேடும் பணியில் இறங்கினார்கள்.. அப்போது இது தொடர்பான விசாரணையை மேற்கொண்டபோதுதான், டியூஷன் படிக்கும் ஆசிரியையின் தங்கை, இன்னொரு இளைஞருடன் சேர்ந்து சிறுவன் புதுச்சேரிக்கு டூர் சென்றிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து எம்ஜிஆர் நகர் போலீஸார் சொல்லும்போது, “டியூஷன் ஆசிரியையின் தங்கை, சிறுவனுடன் நெருங்கி பழகி வந்துள்ளார் என்றும். சிறுவனுக்கு வயது 15 மற்றும் டியூசன் டீச்சரின் தங்கைக்கு 23 வயது என்றும் கூறப்படுகிறது. இதேவேளை அவர் ராகுல் என்ற 19 வயது இளைஞரையும் அழைத்துக் கொண்டு தான் சென்றுள்ளார்.

இவர்கள் மூவரையும் பொலிசார் சென்னையில் வைத்து, விசாரணை செய்து வருகிறார்கள். ஏற்கனவே 10 வகுப்பில் அவன் தேர்ச்சி பெறவில்லை என்று தான் டியூசனுக்கு அம்மா அனுப்பியுள்ளார். ஆனால் அங்கே சென்ற மாணவன் கல்வி கற்காமல் காதல் கற்று வந்துள்ளான். என்ன தான் நடக்கிறது தெரியவில்லை ! தற்போது உள்ள இளைஞர்கள் பலர், தமது வயதுக்கு மேற்பட்ட பெண்களை அதிகம் விரும்புகிறார்கள். அது ஏன் என்பது தான் புரியவில்லை !