தொலைக்காட்சி தொகுப்பாளினி டிடி நீலகண்டன் வெளிநாட்டில் சந்தோஷமாக புத்தாண்டை சோலோவாக கொண்டாடும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார். பிரபல தொகுப்பாளினியும் நடிகையுமான டிடி நீலகண்டன் தனது புத்தாண்டு கொண்டாட்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
தோழிகளுடனோ அல்லது நண்பர்களுடனோ அல்லது குடும்பத்துடனோ இல்லாமல் அனைத்து போட்டோக்களிலும் சோலோவாக இருப்பதை பார்த்த ரசிகர்கள் இந்த வருஷமும் சிங்கிளாக ஜமாய்க்கிறீங்க என கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.
செம டேஸ்ட்டியான பீட்சாவை எடுத்து ஆச்சர்யத்துடன் அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. முடக்கு வாதம் பிரச்சனை காரணமாக நீண்ட நேரம் அவரால் நிற்க முடியாமல் அவதிப்பட்டு வந்தாலும் அடிக்கடி சில பெரிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.
தனது நீண்ட கால நண்பரான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரனை காதலித்து திருமணம் செய்துக் கொண்ட திவ்யதர்ஷினி கடந்த 2017ம் ஆண்டு அவரை விவாகரத்து செய்து பிரிந்தார். இவரது விவாகரத்துக்குப் பிறகு தான் வரிசையாக சமந்தா, தனுஷ், ஜி.வி. பிரகாஷ், ஏ.ஆர். ரஹ்மான், ஜெயம் ரவி என பல தமிழ் சினிமா பிரபலங்களின் விவாகரத்துகள் அரங்கேறின.