ஜேர்மனியில் புது வருட கொண்டாட்டங்கள் பெரும் களோபரமாக மாறியுள்ளது. இதுவரை 400 இளைஞர்களை பொலிசார் கைது செய்துள்ள நிலையில். கூட்ட நெரிசலில் 5 பேர் உயிர் இழந்துள்ளார்கள். மேலும் பல பொலிசார் காயமடைந்துள்ளார்கள். மது போதையில் நின்ற இளைஞர்கள், பொலிசார் மீது வெடிகளையும், வான வேடிக்கைகளையும் தூக்கிப் போட்டுள்ளார்கள். இதனால் பொலிஸ் வாகனம் 2 தீக்கிரையாகியுள்ளது.
ஆயிரக் கணக்கில் கூடி இருந்த இளைஞர்களையும், யுவதிகளையும் கட்டுப்படுத பல நூறு பொலிசார் களத்தில் குதிக்கவேண்டிய நிலை தோன்றியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் ஜேர்மன் மற்றும் பிரான்ஸ் பொலிசார் எந்த நேரமானாலும் தடி அடி நடத்த அவர்களுக்கு உரிமை உள்ளது. இதனால் அவர்கள் அதிகாரிகளின் உத்தரவை எதிர்பார்க்கத் தேவை இல்லை. உடனே அடிக்க ஆரம்பித்து விடுவார்கள். இதில் சிக்கினால் நரம்புகள் நொருங்கும்.