தற்போது அமெரிக்காவில் நடந்த சம்பவம் உலகையே உலுக்கியுள்ள நிலையில். பார்த்தீர்களா நான் சொன்னது உண்மையாகி விட்டது என்று டொனால் ரம் சற்று முன்னர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் குடியேறி பின்னர் குடியுரிமை பெற்ற ஜபார் என்ற நபர், ரக் வண்டியால் இடித்து 15 பேரை கொலை செய்துள்ளார். இது தொடர்பாக டொனால் ரம் சற்று முன்னர் ஒரு அறிவித்தலை வெளியிட்டுள்ளார். ஏற்கனவே நான் கூறி இருந்தேன். கொத்துக் கொத்தாக, அகதிகளை அமெரிக்காவில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று !
அதற்கான நேரம் வந்து விட்டது. அமெரிக்காவை தூய்மைப் படுத்தும் நேரம் நெருங்கி விட்டது என்று எல்லாம் பேசியுள்ளார். டொனால் ரம் வாய்க்கு அவல் பொரி கிடைத்தது போல ஆகி விட்டது. ஏற்கனவே அவர் அகதிகளை நாடு கடத்துவேன் என்று தனது தேர்தல் வாக்குறுதியில் தெளிவாக கூறி இருந்தார். அதனை ஆதரித்த மக்களே, அவருக்கு வாக்குகளைப் போட்டார்கள். தற்போது டொனால் ரம் எதேட்சையாக கூறியது, அவருக்கு சாதகமாக மாறிவிட்டது.