வெளிநாட்டில் வாழும், ஈழத் தமிழர்களும் வாக்குப் போடக் கூடிய வகையில், இலங்கை சட்டத்தில் சில மாற்றங்களை கொண்டு வர உள்ளதாக அனுரா அரசு தெரிவித்துள்ளதாக சில சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. இது எந்த அளவு உண்மை என்பது தெரியவில்லை. காரணம் இந்த அறிக்கை அலரி மாளிகையில் இருந்து இதுவரை வெளியாகவில்லை. மாறாக கொழும்பில் உள்ள சில ஊடகங்கள் , இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது.
இருப்பினும் இப்படி ஒரு மாற்றம் வருவதை, வெளிநாட்டில் உள்ள தமிழர்கள் நிச்சயம் வரவேற்ப்பார்கள். முதல் கட்டமாக இரட்டை குடி உரிமை உடையவர்கள், வெளி நாட்டில் இருந்தபடியே தமது வாக்குகளை செலுத்த முடியும் என்றும், இந்தியாவிடம் இருந்து பெரும் தொகையான தேர்தல் வாக்குப் பதிவு இயந்திரத்தை இலங்கை இறக்குமதி செய்ய உள்ளதாகவும் மேலும் தகவல்கள் வெளியாகியுள்ளது.